RECENT NEWS

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே பொது பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்..அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே பொது பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்..அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

Jan 07, 2025

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே பொது பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்..அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே பொது பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்..அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

Jan 07, 2025

BIG STORIES

குழந்தை யாருக்கு பொறந்ததா? மாமியார் கழுத்தில் கால் வைத்து கதையை முடித்த ஆவேச மருமகள்..! 20 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி?

Jan 05, 2025 01:33 AM

20

452

குழந்தை யாருக்கு பொறந்ததா? மாமியார் கழுத்தில் கால் வைத்து கதையை முடித்த ஆவேச மருமகள்..! 20 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி?

குழந்தை யாருக்கு பொறந்ததா? மாமியார் கழுத்தில் கால் வைத்து கதையை முடித்த ஆவேச மருமகள்..! 20 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் ராணுவ வீரரின் தாய் தவறி விழுந்து மூர்ச்சையாகி உயிரிழந்த சம்பவத்தில் வெளியாகி உள்ள பிரேத பரிசோதனை அறிக்கை திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

முகம் மூடிய படி போலீசாரால் அழைத்துச் செல்லப்படும் இவர் தான் மாமியார் கொலை வழக்கில் 20 நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ள மருமகள் தேவிகலா..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராமன் - கோவிந்தம்மாள் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள் உள்ளனர். மகன் சீராலன் ராணுவத்தில் உள்ள நிலையில் , கணவர் ராமன் காலமாகி விட்டதால் கோவிந்தம்மாள் , தனது மருமகள் தேவிகலா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 9ந்தேதி சுய நினைவற்ற நிலையில் மாமியார் கோவிந்தம்மாளை , மருமகள் தேவி கலா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். வீட்டில் தவறி விழுந்ததில் மாமியார் சுய நினைவிழந்ததாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்

அங்குள்ள மருத்துவர்கள் கோவிந்தம்மாளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறிய நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கோவிந்தம்மாளின் சடலத்தை தேவிகலா வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில், கோவிந்தம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக மகள்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து கோவிந்தம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 20 தினங்கள் கழித்து பிணக்கூறாய்வு அறிக்கை வந்த நிலையில் கோவிந்தமாளில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து மருமகள் தேவிகலாவை பிடித்து விசாரித்த போது , கோவிந்தமாள் கொலைக்கான மர்மம் விலகியது. மகன் சீராலன் ராணுவத்தில் இருக்கும் நிலையில் மருமகள் தேவிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை மாமியார் கோவிந்தம்மாள் திட்டி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று தனது கணவர் மீது, தான் கொண்ட தீராத காதலின் அடையாளமாக தனக்கு பிறந்த இரு குழந்தைகளின் பிறப்பில் சந்தேகப்பட்டு மாமியார் இரு குழந்தைகளும் யாருக்கு பிறந்தது? என்று அவதூறாக பேசியதால் ஆத்திரம் தாங்காமல் கழுத்தில் ஏறி மிதித்ததாக போலீசாரிடம் தெரிவித்த தேவி கலா, மாமியாரின் கழுத்தை பிடித்து நெரித்ததால் அவர் மூர்ச்சையானதாகவும் , குழந்தைகளின் எதிர்காலம் கருதி கொலையை மறைக்க முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தேவிகலாவை கைது செய்து முகத்தை மூடி அழைத்துச் சென்ற போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

புஷ்பா 2 திரைப்பட பாணியில் அதிவேக காரை ஏற்றிய சம்பவம் கணவனுக்கு நீதி கேட்ட பெண்..! விபத்து கொலை வழக்கானது எப்படி ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News