BIG STORIES
சட்டென வெளியேறிய ஆளுநர்.. தமிழ்த்தாய் வாழ்த்தா? - நாட்டுப்பண்ணா? மீண்டும் ஆளுநர் Vs தமிழக அரசு
Jan 07, 2025 01:12 AM
20
446
சட்டென வெளியேறிய ஆளுநர்.. தமிழ்த்தாய் வாழ்த்தா? - நாட்டுப்பண்ணா? மீண்டும் ஆளுநர் Vs தமிழக அரசு
காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்திற்குள் காலை 9.29 மணிக்கு ஆளுநர் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அவை நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது உரையை வாசிக்காமல், ஆளுநர் உடனடியாக வெளியேறினார்.
சிவந்த கடு கடு முகத்துடன், காலை 9.33 மணிக்கு தனது காரில் ஏறிய ஆளுநர் ராஜ்பவன் திரும்பினார்.
ஆளுநர் வெளியேறியது ஏன்? என்பது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் காலை 9.43 மணியளவில் விளக்கம் பதிவிடப்பட்டது. ஆனால், திடீரென அப்பதிவு நீக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதிலிருந்த பிழைகள் நீக்கப்பட்டு சில நிமிடங்களில் மீண்டும் புதிதாக பதிவு வெளியிடப்பட்டது.
சட்டப்பேரவையில் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாக ராஜ்பவன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர், சபாநாயகரிடம் ஆளுநர் எடுத்துக்கூறியும், அதை அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர் என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதாலேயே ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்றும் ராஜ்பவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் வெளியேறிய அடுத்த சில நொடிகளில், ஆளுநர் வாசிக்க இருந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிந்தவுடன் எழுந்த அவை முன்னவர் துரைமுருகன், 2வது ஆண்டாக உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநரின் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்காக ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் சிவசங்கர் காட்டமாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்து, அதைத்தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டதாக அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News