BIG STORIES
புஷ்பா 2 திரைப்பட பாணியில் அதிவேக காரை ஏற்றிய சம்பவம் கணவனுக்கு நீதி கேட்ட பெண்..! விபத்து கொலை வழக்கானது எப்படி ?
Jan 07, 2025 01:14 AM
20
131
புஷ்பா 2 திரைப்பட பாணியில் அதிவேக காரை ஏற்றிய சம்பவம் கணவனுக்கு நீதி கேட்ட பெண்..! விபத்து கொலை வழக்கானது எப்படி ?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடம் - அம்மன் பாளையம் பிரதான சாலையில், வெடிக்காரன் பாளையம் பிரிவு பகுதியில் 4 ஆம் தேதி அதிகாலை பலத்த ரத்தக்காயங்களோடு சாலையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக வெள்ளிதிருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு கிடந்த செல்போனை வைத்து போலீசார் விசாரித்த போது இறந்தவர் திருப்பூர் மாவட்டம் , சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பதும்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பகுதியை சேர்ந்த தனது அத்தை மகனான சேகர் என்பவருக்கு சொந்தமான இயற்கை உரம் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த நான்காண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
வெங்கடாசலம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததாக அவரது மனைவி மரகதம் மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்பதற்கு முன்பாக மூன்றாம் தேதி இரவு தனது தம்பிக்கு போன் செய்து பேசிய வெங்கடாசலம் , சேகருக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தன்னை காரில் இருந்து இறக்கி விட்டு சென்று விட்டதாக கூறி இருந்ததால் , காவல் நிலையம் வராமல் செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்திருந்த சேகர் மீது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து வெங்கடாஜலத்தின் மனைவி மரகதம் தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து வெள்ளித் திருப்பூர் போலீசார், விபத்து என்பதை சந்தே மரணம் என வழக்கு பதிவு செய்து வெங்கடாசலத்தின் சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சேகர் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரிடம் வெள்ளிதிருப்பூர் காவல் நிலையம் வந்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நடத்திய விசாரணையில் கொலைக்காண பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பவத்தன்று மூன்றாம் தேதி மதியம் நிறுவனத்தில் இருந்து காரை எடுத்துக்கொண்டு இயற்கை உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்காக சென்ற சேகர், மூர்த்தி மற்றும் வெங்கடாஜலபதி ஆகிய மூவரும் ஒலகடம் -அம்மன் பாளையம் பிரதான சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி மது அருந்தி உள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் சேகருக்கும் வெங்கடாஜலத்திற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது, அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களது தாயை பற்றி மாறி மாறி இழிவாக பேசியதாக கூறப்படுகின்றது.
இதனால் உண்டான ஆத்திரத்தில் வெங்கடாஜலத்தை காரில் ஏற்றாமல் சேகர் மற்றும் மூர்த்தி ஆகியோர் மட்டும் காரில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். கார் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், வெங்கடாசலம் தனது தாய் குறித்து தகாத வார்த்தைகளில் திட்டியதை எண்ணி மிகுந்த கோபம் அடைந்த சேகர் மீண்டும் காரை திருப்பிக் கொண்டு வந்து சாலையில் தள்ளாடியபடி நடந்து வந்த வெங்கடாஜலம் மீது பயங்கரமாக மோதி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் காலையில் போதை தெளிந்த பின்னர் எழுந்து வெங்கடாஜலத்திற்கு போன் செய்ததாகவும் அப்போது வெங்கடாசலத்தின் போனை யாரோ ஒரு நபர் எடுத்து வெங்கடாசலம் இறந்து கிடப்பதாக தெரிவித்ததை அடுத்து பயந்து போய் செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டு சேகர் மூர்த்தியுடன் சேர்ந்து காரில் இருந்த ரத்த கறைகளை தண்ணீர் மற்றும் மண்ணை போட்டு அகற்றியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சேகர் மற்றும் மூர்த்தி ஆகிய இருவர் மீதும் கொலை மற்றும் தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
புஷ்பா 2 திரைப்படத்தில் தன்னை மன்னிப்பு கேட்கவைத்த போலீஸ் ஆபீசரின் கார் மீது தனது காரை திருப்பி கொண்டு வந்து நாயகன் மோதுவது போல இந்த கொலை சம்பவத்தை சேகர் நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகின்றது.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News