தமிழ்நாடு
சேட்டு பொங்கல் கடை கடையாய் வசூல் ஒயிட் அண்ட் ஒயிட் கொள்ளையன் சிசிடிவி பார்த்து தப்பி ஓட்டம்
Jan 08, 2025 04:40 PM
20
135
சேட்டு பொங்கல் கடை கடையாய் வசூல் ஒயிட் அண்ட் ஒயிட் கொள்ளையன் சிசிடிவி பார்த்து தப்பி ஓட்டம்
ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடைகளில் ஜிஎஸ்டி ஆபிஸர் எனக்கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்த ஒயிட் அண்ட் ஒயிட் ஆசாமியை வியாபாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
ஜிஎஸ்டி ஆபிஸர் எனக்கூறி எலக்ட்ரானிக் கடைகளில் பொங்கல் வசூலில் ஈடுபட்டு சிக்கிய ஒயிட் அண்ட் ஒயிட் ஆசாமி இவர் தான்..!
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர், திருநின்றவூர் , ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி ஆபீஸர் எனக்கூறி வெள்ளை சட்டையும் வெள்ளை பேண்டும் அணிந்த ஆசாமி ஒருவர் வட மாநிலத்தவர் நடத்தும் எலக்ட்ரானிக் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி மிரட்டுவதும், பின்னர் தனக்கு பணம் வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டு பெறுவதும் தொடர்ந்தது.
அந்தப் பண வசூலிக்கும் நபர் போலி என தெரிய வந்ததும் அவர் குறித்த விவரங்களை போட்டோவுடன் வியாபாரிகள் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்தனர்
இந்த நிலையில் திருநின்றவூரில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு ஆய்வுக்குச் சென்ற அந்த போலி ஆபிஸரை அங்கிருந்த ஊழியர் அடையாளம் கண்டு அவரிடம் ஜிஎஸ்டி ஆபீஸர் என்பதற்கு உரிய அடையாளத்தை காட்டும்படி கேட்டிருக்கிறார், இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வந்திருப்பதையும் அவரிடம் காண்பித்திருக்கிறார் .
மேலும் கடையில் சிசிடிவி இருப்பதையும் சுட்டிக்காட்டி ஒரிஜினல் ஜிஎஸ்டி ஆபீசருக்கு போன் செய்யட்டுமா ? என்று கேட்டதும் கடைக்குள் நுழைந்த போலி ஆபிசர் விட்டால் போதும் என்று தலை தெரிக்க ஓடியதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அங்குள்ள வியாபாரிகள் அவரை விரட்டிப் பிடித்து அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று விசாரித்து வியாபாரிகள் அவரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News