தமிழ்நாடு
"திருட்டுக்கூட்டத்தில் ஒருத்தனாக இருந்தேன்" "அப்ப தாத்தா.. இப்ப பேத்தா...அதுக்கென்ன?" எல்லை மீறுகிறாரா சீமான்...? "திராவிடத்தை ஒழிப்பதே கொள்கை.." ஆதாரம் இருக்கு... சீமான் ஆவேசம்...
Jan 09, 2025 02:11 PM
20
72
"திருட்டுக்கூட்டத்தில் ஒருத்தனாக இருந்தேன்" "அப்ப தாத்தா.. இப்ப பேத்தா...அதுக்கென்ன?" எல்லை மீறுகிறாரா சீமான்...? "திராவிடத்தை ஒழிப்பதே கொள்கை.." ஆதாரம் இருக்கு... சீமான் ஆவேசம்...
திருட்டு கூட்டத்தில் ஒருவனாக தான் இருந்ததாகவும் , பிரபாகரனை சந்தித்த பிறகு தான் கொள்கைகளை மாற்றிக் கொண்டதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கிய கால கட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் தமிழர்களை முன்னேற்ற தந்தை பெரியாரைப் போல் ஒருவரும் உழைக்கவில்லை என்று பெருமையாக பேசியிருந்த சீமான், தற்போது அப்படியே தலைகீழாக பெரியாரை கடுமையாக விமர்சித்துள்ளார். புதன்கிழமையன்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கு? என்று கேள்வி கேட்டவர் பெரியார் என கடுமையாக விமர்சித்ததால் சர்ச்சை வெடித்தது.
தனது பேச்சுக்கு உரிய ஆதாரத்தை சீமான் வெளியிட வேண்டும் எனக்கூறி, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
அப்போது சீமான் வீட்டிற்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் காரை தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினர் கொடி குச்சிகளைக் கொண்டு தாக்கி சேதப்படுத்தினர்.
புதுச்சேரி குயவர் பாளையம், லெனின் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நா.த.க நிர்வாகிகள் கூட்டத்தில் சீமான் பங்கேற்கவிருந்த நிலையில், அந்த மண்டபத்தை தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினரை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, சீமான் நிகழ்ச்சி நடக்கவிருந்த மண்படத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள நெல்லித்தோப்பு சிக்னல் ரவுண்டானாவில் பொறுத்தப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி கொடிகளை தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினர் கழற்றி வீசினர்.
இதை பார்த்து டென்சனான நாம் தமிழர் கட்சி புதுச்சேரி நிர்வாகிகள் திராவிடக்கழகத்தினரை நோக்கி பாய முயன்றனர். அப்போது பேரிகார்டுகளை போட்டு அவர்களை போலீசார் தடுத்தனர். தடுப்பை மீறி செல்லமுயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினரை கைது செய்த போலீசார், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எச்சரித்து நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குள் அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், செய்தியாளரிடம் பேசிய சீமான், பெரியார் குறித்து பேசியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றார்.
திருட்டு கூட்டத்தில் ஒருவனாக இருந்த தான், பட்டு தெளிந்து இப்போது அவரை கடுமையாக விமர்சிப்பதாகவும், இதில் தவறு ஏதுமில்லை என்றும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
தனக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் தன்னை நோக்கி எறிகின்ற செருப்பு ஏழு அல்லது எட்டு சைஸ் செருப்பாக இருக்க வேண்டும் என்றும் இதேபோல் முட்டை என்பதும் நாட்டுக்கோழி முட்டையாக வீச வேண்டுமெனவும் தனக்கு எதிரான போராட்டம் குறித்து அவர் விமர்சித்தார்
தந்தை பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு எதிராக திமுக மற்றும் திராவிடக் கழகத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தை பார்த்தவன் என்பதால் எந்த வழக்கையும் சந்திக்க தயார் என்றார்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரியிலிருந்து சென்னை புறப்பட்டார் சீமான்.
கோவையில் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பெரியார் குறித்து சீமான் கூறியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.
தந்தை பெரியார் பேசியதெல்லாம் இப்போது பொதுவெளியில் பேச முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News