தமிழ்நாடு
இனி எப்படி முறுக்குவீங்க பாய்ஸ்..? மடக்கிப் பிடித்து நறுக்கிய போலீஸ் நிஜமாக “சைலன்ஸ்” ஆன சம்பவம்
Jan 09, 2025 03:45 PM
20
74
இனி எப்படி முறுக்குவீங்க பாய்ஸ்..? மடக்கிப் பிடித்து நறுக்கிய போலீஸ் நிஜமாக “சைலன்ஸ்” ஆன சம்பவம்
வேலூரில் கார் மற்றும் பைக்குகளில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை மாட்டிக் கொண்டு வலம் வந்த இளைஞர்களை பிடித்த போக்குவரத்து போலீசார், வாகனங்களில் பொறுத்தப்பட்டிருந்த சைலன்சர்களை அறுத்து அப்புறப்படுத்தினர்
பைக்கிலும், காரிலும் போக்குவரத்து விதியை மீறி அதிக சத்தம் எழுப்பும் ராக்கெட் சைலன்ஸர்களை பொறுத்திக் கொண்டு சாலைகளில் வண்டிகளை முறுக்கிச்சென்ற பாய்ஸை மடக்கிய போலீசார் அவர்களது வண்டிகளின் சைலன்ஸர்களை நறுக்கிய காட்சிகள் தான் இவை..!
வேலூர் மாநகரில் நாளுக்குநாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லக்கூடிய நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது. வேலூர் மாநகரில் அண்மை காலமாக இளைஞர்கள் பலர், தங்களின் இருசக்கர வாகனங்களிலும், சிலர் கார்களிலும் போக்குவரத்து விதியை மீறி அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்திக் கொண்டு வலம் வந்தனர்.
இதையடுத்து அதிரடி ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை மறித்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்
ஒவ்வொரு வாகனத்தையும் ஆக்ஸிலேட்டரை முறுக்கி சோதித்தனர், சைலன்ஸர்கள் மாடிபிகேசன் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ததும் அந்த வாகனத்தின் சைலன்ஸரை அறுத்து எடுத்தனர். ஒரே நாளில் 45 சைலன்ஸர்கள் நறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
ஸ்டைலுக்காகவும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுருத்தி கவனத்தை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் சைலன்ஸர் மாடிபிகேசன் செய்யப்படுவதாக தெரிவித்த போலீசார், இது போல விதியை மீறி ஓவர் சவுண்ட் சைலன்ஸர்களுடன் பைக்கில் சுற்றினால் அபராதத்துடன், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News