தமிழ்நாடு
குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்குறீங்களா..?! முதல்ல இத பாருங்க மேடம்..!
Jan 10, 2025 03:59 AM
20
157
குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்குறீங்களா..?! முதல்ல இத பாருங்க மேடம்..!
திருவாரூர் மாவட்டம் கண்டம்தோப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் - ஆர்த்தி தம்பதியினர் கடந்த 5 ஆம் தேதியன்று மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள பிரபல தனியார் ஷாப்பிங் மாலில் 25 சாக்லேட்டுகள் அடங்கிய டியூக்ஸ் நிறுவனத்தின் 2 சாக்லேட் பாக்ஸை வாங்கியுள்ளனர்.
அதில் ஒன்றை தாயார் வீட்டிற்கும், மற்றொரு சாக்லேட் பாக்ஸை தனது குழந்தைகளுக்காகவும் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் ஆர்த்தியின் தாயார் போனில் அந்த சாக்லேட்டுகளை சாப்பிட வேண்டாம், அதில் பூச்சி இருப்பதாக கூறியுள்ளார்.
உடனே ஆர்த்தி தான் வாங்கிய சாக்லேட் பாக்ஸை பிரித்தபோது உயிருடன் பூச்சி நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மயிலாடுதுறை ஷாப்பிங் மாலுக்கு மணிகண்டன் ஆர்த்தி இருவரும் சென்று காலாவதி ஆகாமலே சாக்லேட் பாக்ஸில் பூச்சி வந்தது எப்படி? என கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பூச்சி மேலே இருந்து விழுந்துருக்களாம் என கடை உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த பின் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்து புகாரை பெற்றுக் கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள சாக்லேட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும் சாக்லேட்டை கோயமுத்தூரில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முடிவுகளின் அடிப்படையில் வெளிமாநில சாக்லேட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற சாக்லேட்டுகளை குழந்தைகள் சாப்பிட்டு விட கூடாது எனவும் இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News