முகப்பு
பா.ம.க சாதிக்கட்சியா..? செய்தியாளரால் டென்ஷன்.. தடதடத்த தங்கர்பச்சான்!
Jun 04, 2025 01:39 AM
127
பா.ம.க சாதிக்கட்சியா..? செய்தியாளரால் டென்ஷன்.. தடதடத்த தங்கர்பச்சான்!
"பேரன்பும் பெரும் கோபமும்" திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில், அரசியல் சார்ந்த கேள்வியால் டென்ஷனான இயக்குநர் தங்கர்பச்சான், பாமகவை சாதிக்கட்சி என்று எப்படிச் சொல்லலாம் என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் விஜித் கதாநாயகனாக நடித்திருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சென்னை வடபழனி பிரசாத் லேபில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் சிவப்பிரகாஷ், படத்தின் தயாரிப்பாளர் தங்கர்பச்சான் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
இந்தப் படம் ஆத்திகமும் பேசவில்லை, நாத்திகமும் பேசவில்லை என்றும் பகுத்தறிவைத்தான் பேசுகிறது என்றும் இயக்குநர் சிவபிரகாஷ் கூறினார். அப்போது குறுக்கிட்ட யூடியூப் செய்தியாளர் ஒருவர், கடலூரில் சாதிக் கட்சியில் வேட்பாளராக நின்ற ஒருவரின் மகனை வைத்து எப்படி சாதி மறுப்பு பேசும் படத்தை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் சொல்ல இயக்குநர் தயாரானபோது அவரது நெஞ்சில் கை வைத்து நெட்டித் தள்ளிவிட்டு கோபத்துடன் பேசிய தங்கர் பச்சான், தமிழ்நாட்டில் சாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தும் ஒரு கட்சியைக் காட்டுங்கள் என்றார்.
செய்தியாளர் சந்திப்பு தடம் மாறிப் போவதை உணர்ந்த படத்தின் இயக்குநர் சிவபிரகாஷ், கதாபாத்திரத்துக்கான சரியான முகமாக மட்டுமே தாம் விஜித்தைப் பார்த்ததாகக் கூறினார். வி.சி.க தலைவர் திருமாவளவனை அழைத்தும் படத்தை திரையிட்டுக் காண்பித்ததாகவும் அவர் கூறினார்.
இயக்குநரின் விளக்கத்தைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அந்த யூடியூப் செய்தியாளர் ஒரே கேள்வியைக் கேட்கவே, தங்கர்பச்சான் ஆவேசமானார். படம் தொடங்குவதற்கு முன்பு பாமகவில் தாம் ஒரு உறுப்பினர் கூட கிடையாது என்றும் அக்கட்சியின் அலுவலகம் எங்கு இருக்கிறது என்பது கூடத் தெரியாது என்றும் கூறினார். இருந்தாலும் பாமகவை சாதிக் கட்சி என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என டென்ஷனான தங்கர்பச்சான், சுமார் ஆறு இட ஒதுக்கீடுகளை ராமதாஸ் வாங்கிக் கொடுத்தார் என்றும் அன்புமணி பெயரைத் தவிர இதுவரை இருந்த சுகாதாரத்துறை அமைச்சரின் பெயர் யாருக்காவது தெரியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu