முகப்பு
‘மனுஷி’க்கு சென்சார் மறுப்பு அடுத்தடுத்து வில்லங்கம்.. சிக்கலில் வெற்றி மாறன்?
Jun 04, 2025 10:36 AM
72
அறம் திரைப்படத்தை இயக்கிய கோபி நயினாரின் இயக்கத்தில், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்த திரைப்படம் 'மனுஷி'. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் நடிகர் நாசர், தமிழ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'மனுஷி' திரைப்படத்தின் ட்ரைலர் கடந்தாண்டு வெளியானது. ட்ரைலரில் ஒரு பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் சித்ரவதை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. மேலும் ட்ரைலரில் இடம் பெற்ற வசனங்கள் பேசுபொருளாக மாறியது.
மனுஷி திரைப்படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பிய நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்சார் போர்டு, படத்திற்கு தணிக்கை சான்று வழங்க மறுத்தது. இதற்கு காரணம் படத்தில் மத்திய அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும் , கம்யூனிச கொள்கைகளை குழப்பும் விதத்தில் வசனங்கள் இடம்பெற்றதாகவும் அதனால் தணிக்கை சான்று வழங்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது.
படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் இதை எதிர்த்து, படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்த மனுவில் சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுவதற்கு முன்பு தனது தரப்பு விளக்கத்தை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். சென்சார் போர்டில் இருப்பவர்கள் படம் குறித்தான தங்களது தனிப்பட்ட கருத்துக்களை கூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்த வெற்றிமாறன் படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் இயக்கிய ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானபோதும் இணையத்தில் கடும் விமர்சனத்தை சந்தித்து விவாதத்திற்கு உள்ளானது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu