பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
BIG STORIES
கணினி கற்க வந்த இடத்தில் மாணவியிடம் காதல் சேட்டை... ஆசிரியருக்கு விழுந்த அடி மழை..!
Jun 05, 2025 02:19 AM
137
கணினி கற்க வந்த இடத்தில் மாணவியிடம் காதல் சேட்டை... ஆசிரியருக்கு விழுந்த அடி மழை..!
கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவியிடம் காதல் சேட்டையில் ஈடுபட்டதால் கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளரை உறவினர்கள் சட்டையை பிடித்து இழுத்துச்சென்று நையப்புடைத்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் விகாரபாத் நகரில் நவாஸ் என்பவர் பிரைன் ட்ரீ கம்ப்யூட்டர் ட்ரைனிங் சென்டர் என்ற பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கற்றுக் கொள்வதற்காக வந்த மாணவி ஒருவரிடம் நவாஸ் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியரான நவாஷின் சில்மிஷ சேட்டைகள் பற்றி அந்த மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் , கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவியரின் உறவினர்கள் நவாஷை இழுத்துச்சென்று கடுமையாக தாக்கினர்.
ஆபாச ஆசிரியரை நையப்புடைத்த மாணவியின் உறவினர்கள் ஆடைகளையும் கிழித்து விட்டனர்
அவருக்கு ஆதரவாக வந்து பேசியவரையும் கடுமையாக எச்சரித்த மாணவியின் உறவினர்கள் நவாசை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அவர் வர மறுத்து விட்டார்.
போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்கப்பட்டது, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நவாஷை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நவாஸ் இதற்கு முன்னரும் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu