RECENT NEWS

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

Jun 06, 2025

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

Jun 06, 2025

BIG STORIES

தக் லைப் ரசிகைகளின் தக் லைப் விமர்சனம்.. சும்மா கொல்லுராங்கய்யா.! ஆன்லைனில் வெளியானதால் அதிர்ச்சி

Jun 06, 2025 01:45 AM

134

தக் லைப் ரசிகைகளின் தக் லைப் விமர்சனம்.. சும்மா கொல்லுராங்கய்யா.! ஆன்லைனில் வெளியானதால் அதிர்ச்சி

தக் லைப் ரசிகைகளின் தக் லைப் விமர்சனம்.. சும்மா கொல்லுராங்கய்யா.!

கமல் நடிப்பில் தக் லைப் திரைப்படம் வெளியாகி திரையரங்கில் 3 காட்சிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் முழு படமும் ஆன் லைனில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. படம் பார்த்த ரசிகைகளின் தக் லைப்பான விமர்சனம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில்... கமல் மற்றும் சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட தக் லைப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

தக் லைப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாத நிலையில் ஏராளமான ரசிகர்கள் பெங்களூரிவில் இருந்து சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வந்து அங்குள்ள திரையரங்குகளில் தக் லைப் படத்தை கண்டுகளித்தனர்

தனியார் அலுவலகத்தில் 3 மணி நேரம் பர்மிஷன் கேட்டு, முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகைகள் இருவர் படம் குறித்த தங்கள் அனுபவத்தை குதுகலமாக பகிர்ந்து கொண்டனர்

படத்தின் பல காட்சிகள் எளிதில் புரியா வண்ணம், வித்தியாசமாக இருப்பதாகவும், இளையதலைமுறையினருக்கு இது புதிய அனுபவமாக இருக்கும் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்

சிம்புவை பார்ப்பதற்காக வந்ததாக தெரிவித்த ரசிகை ஒருவர், கடைசியில் படத்தில் எல்லோரையும் கொன்று விட்டதாக ஆதங்கப்பட்டார்

தக் லைப் அறிமுக விழாவில் பாடகி சின்மயி பாடிய “முத்த மழை இங்கு கொட்டி தீராதோ..” என்ற மெலடி பாடல் சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலானது. அந்த பாடல் படத்தில் இல்லை என்று பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்

தக் லைப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் திருட்டு வீடியோ ஆன்லைனில் வெளியானதால் படக்குழு கூடுதல் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆன்லைனில் சட்ட விரோதமாக தக் லைப் படத்தை வெளியிட கூடாது என்று நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றிருந்த நிலையில், முழு படமும் ஆன் லைனில் வெளியாகி இருப்பது படக்குழுவினரையும், கமல் ரசிகர்களையும் கவலை கொள்ள செய்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies