பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
BIG STORIES
சின்மயியா? தீயா?.. ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்.. இது மணி சாரின் 'தக் லைஃப்'
Jun 06, 2025 07:43 AM
57
சின்மயியா? தீயா?.. ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்.. இது மணி சாரின் 'தக் லைஃப்'
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் அனைத்து பாடல்களையும் இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் மேடைகளில் அரங்கேற்றப்பட்டது.
அப்போது 'முத்த மழை' என்ற பாடலை பாடிய பாடகி 'தீ' இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காததால் அந்த பாடலின் இந்தி வெர்சனை பாடிய சின்மயி மேடையில் தமிழ் வெர்சனில் பாடினார்.
சின்மயியின் குரலை கேட்ட இசை பிரியர்கள் பலரும் சின்மயியை இணையத்தில் பாராட்டி தீர்த்ததோடு, அவரது வெர்சனையும் வெளியிடுமாறு படக்குழுவுக்கு கோரிக்கையாக வைத்தனர்.
அது மட்டுமில்லாமல் 'எது பெருசுனு அடிச்சு காட்டு'னு வடிவேலு சொன்னதுபோல யாருடைய வெர்ஷன் சிறப்பாக உள்ளது என சிலர் சண்டையிட்டும் வந்தனர்.
இது தீவிரமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த சின்மயி,எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது வருத்தத்தை அளிக்கிறது. 'தீ' இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷல் குரலை தூக்கி சாப்பிட்டு விடுவார் என பெருந்தன்மையாக கூறினார்.
சின்மயி பாடிய 'முத்தமழை' பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'தக் லைப்' ஆல்பத்தில் 10-வது பாடலாக சின்மயி வெர்ஷன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் தக் லைப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தில் 'முத்த மழை' பாடல் யாரது குரலில் இடம்பெற்றுள்ளது என ஆவலோடு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. படத்தில் முத்தமழை பாடலே இடம்பெறவில்லை எனவும் டைட்டில் கார்டில் கூட வரவில்லை என கூறப்படுகிறது.
இதனை பார்த்தவர்கள் இது மணிரத்னம் கொடுத்த ரியல் 'தக் லைஃப்' என கிண்டலடித்து வருகின்றனர். "பாட்டு இருந்தா தான அத வச்சு சண்டை போடுவீங்க" என இயக்குனரே தூக்கிட்டாரு போல எனவும் நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu