முகப்பு
"புலி வருது, புலி வருது" என பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின் - இ.பி.எஸ்.
Jun 06, 2025 02:11 PM
73
பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின் - இ.பி.எஸ்.
இன்னும் வராத தொகுதி மறுசீரமைப்பை வைத்து "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவர், மறுசீரமைப்பின் பெயரில் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு ரவுடியசத்தையும், திருட்டுக்களையும் களத்தில் நிவர்த்தி செய்வது குறித்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் அவரது மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை என்றும் கூறினார்.
மறுசீரமைப்பு பற்றி பேசும் ஸ்டாலின் டாஸ்மாக் ஊழல், போதைப்பொருள் மாபியா, கள்ளச்சாராயம், அமைச்சர்களின் ஊழல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இ.பி.எஸ். வலியுறுத்தினார்.
தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை அமித் ஷாவை சந்தித்தபோது தெரிவித்தாகவும், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் தன்னுடையதாக தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu