RECENT NEWS

கழுத்தளவு தண்ணீரில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்கள்.. பின்னணி என்ன?.

கழுத்தளவு தண்ணீரில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்கள்.. பின்னணி என்ன?.

Jun 07, 2025

கழுத்தளவு தண்ணீரில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்கள்.. பின்னணி என்ன?.

கழுத்தளவு தண்ணீரில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்கள்.. பின்னணி என்ன?.

Jun 07, 2025

BIG STORIES

அடங்க மறுப்போம்.. அத்துமீறுவோம்.. திமிறி எழுவோம்.. திருப்பி அடிப்போம்.. சட்டையை கழற்றி போலீசுக்கு சவால்..!

Jun 07, 2025 01:49 AM

98

அடங்க மறுப்போம்.. அத்துமீறுவோம்.. திமிறி எழுவோம்.. திருப்பி அடிப்போம்.. சட்டையை கழற்றி போலீசுக்கு சவால்..!

அடங்க மறுப்போம்.. அத்துமீறுவோம்.. திமிறி எழுவோம்.. திருப்பி அடிப்போம்.. சட்டையை கழற்றி போலீசுக்கு சவால்..!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசாரிடம் சட்டையை கழட்டி வீசி , சொடக்கு போட்டு சவால் விட்ட விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கைது செய்யகோரி வீடியோ ஆதரத்துடன் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு ஒரு சட்டமா என்று கேட்கும் அளவுக்கு விசிக நிர்வாகி அட்ராசிட்டி செய்த அலப்பறை காட்சிகள் தான் இவை..!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகப் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான பெரியகுளம் தென்கரைப் பகுதியை சேர்ந்த தலித்தர்மா என்ற தர்மராஜ் , அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பரஞ்ஜோதி ஆகியோர் மது போதையில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பதாக பெண்கள் சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்

அங்கு வந்த போலீசார் இருவரையும் அங்கிருந்து கிளம்பும்படி கூற, தன் மீது புகார் அளித்தவர் தனது அக்கா என்றும் அவர் எப்படி புகார் தெரிவிக்கலாம் என்றும் அலம்பல் செய்த தலித்தர்மா, விடுதலை சிறுத்தை கட்சியின் பெயரை சொல்லி, எஸ்.பி, டி.எஸ்.பி என யாரை வேணாலும் வர சொல்லு என்று போலீசாரை மிரட்ட தொடங்கினார்

இதனால் போலீசார் அங்கிருந்து பின் வாங்கியதும், தனக்கு சட்டம் தெரியும் என்றும் தான் ஒரு வழக்கறிஞர் என்றும் ஆக்ரோசமாகி, அடங்க மறுபோம்.. அத்துமீறுவோம்.. என்று தனது கட்சியின் கொள்கையை கூறி தன்னை கைது செய்து பாருங்கள் என்று போலீசாருக்கு பகிரங்க சவால் விட்டார்

ஒரு கட்டத்தில் சொடக்கு போட்டு சட்டையை கழற்றி வீசி போலீசாருக்கு எதிராக கடும் சொற்களை பேசினார்

இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து நேரடியாக போலீசாரிடம் சென்று எங்களுக்கு ஒரு சட்டம், விசிகவினருக்கு ஒரு சட்டமா? எனக்கேட்டு நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பொது இடத்தில் மது போதையில் ஆபாசமாக பேசியது தொடர்பாக 2 பேர் மீதும் க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies