BIG STORIES
ரூ 245 கோடிப்பே.. கமல் சொத்து மதிப்பு.. அசரவைக்கும் வருமானம்..! 1.4 கிலோ தங்கம் இருக்கு
Jun 08, 2025 03:06 AM
26
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.
திரையுலகில் வரும் வருமானம் முழுவதையும் அப்படியே திரைப்பட தயாரிப்பிலேயே கொட்டும் ஒரே நடிகர் என்ற பெருமைக்குரியவர் கமல் ஹாசன்..!
விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மீண்டும் அடுத்தடுத்த தயாரிப்புகளை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் முன்னெடுத்தது. சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து தயாரித்த அமரன் மற்றும் ஒரு ஜாக்பாட்டாக அமைந்ததால் கமல்ஹாசனின் வருமானம் அதிகரித்தது.
அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு இணைந்து நடித்துள்ள தக் லைப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே முன் வணிகம் மூலம் பல கோடி லாபத்தை ஈட்டியதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பாராளுமன்ற மேல்சபை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள கமல்ஹாசன் தனது சொத்து மதிப்பை இணைத்துள்ளார்
அதன் படி 59 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், 64 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் , அசையா சொத்துக்களில் 37 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கட்டுமான பணிகள் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன் படி அவரிடம் 8.5 கோடி ரூபாய் மதிப்புள்ள லக்சஸ், பி.எம்.டபிள் யூ, பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய 4 கார்கள் இருப்பதாகவும், 76 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பங்கு பத்திரங்கள் , மியூட்சுவல் பண்ட் உள்ளிட்டவற்றில் 5 கோடியே 50 லட்சம் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் 1990 மற்றும் 91 கலக்கட்டத்தில் 5 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கு வங்கிய 14 சொத்துக்களின் மதிப்பு தற்போது 22 கோடியே 24 லட்சம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை, சோழிங்க நல்லூர், உத்தண்டி கிராமத்தில் மட்டும் 111 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக உத்தண்டி கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு 3 கோடியே 12 லட்சம் மதிப்பில் 2795 சதுர அடி நிலத்தில் 6382 சதுர அடிக்கு கட்டப்பட்ட கட்டிடத்தின் தற்போதைய மதிப்பு 3 கோடியே 5 லட்சமாக குறைந்து விட்டதாக குறிப்பிடபட்டுள்ளது.
ஆழ்வார் பேட்டை டி.டி.கே சாலை, உத்தண்டி ரங்க நாதன் அவென்யூ ஆகிய இடங்களில் 112 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் , ஒட்டுமொத்தமாக கமல் ஹாசனின் சொத்து மதிப்பு 245 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 46 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் கமல்ஹாசன் வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu