RECENT NEWS

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

Jun 10, 2025

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

Jun 10, 2025

BIG STORIES

அந்த நடிகை குளித்த நீரில் தயாரான வாசனை சோப்பு ரூ 25 ஆயிரத்துக்கு ரீ சேல்..!அடேய்.. ஆசைக்கு அளவே இல்லையா..?

Jun 09, 2025 01:25 AM

204

அந்த நடிகை குளித்த நீரில் தயாரான வாசனை சோப்பு ரூ 25 ஆயிரத்துக்கு ரீ சேல்..!அடேய்.. ஆசைக்கு அளவே இல்லையா..?

சினிமா நடிகை ஒருவர் குளித்த தண்ணீரில் தயாரான வாசனை சோப்பு ஒன்றை 25 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து ஆன் லைனில் ரசிகர்கள் போட்டிபோட்டு வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

யார் அந்த நடிகை...? டிராகன் காயடு லோகரா.. ? இல்ல குண்டூர்காரம் ஸ்ரீலீலாவா...? நம்ம நேசனல் க்ரஷ் ராஷ்மிகாவா..? இல்ல அனுஷ்காவா, நயன்தராவா, தக்லைப்பில் கமலையும் சிம்புவையும் அடித்துக் கொள்ள வைத்த திரிஷாவா ? அவசரபாடாதீங்க.. இவங்க யாருமே இல்லை...!

1997 ஆம் ஆண்டு வாசிங்டனின் பிறந்து, 2009 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்து ஹாலிவுட்டில் கலக்கி வரும் 27 வய்தான அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி தான் அந்த 25 ஆயிரம் ரூபாய் சோப்பின் வாசனைக்கு சொந்தக்காரர்..!

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியோட சோப்பு டப்பா என்று 10 ரூபாய் பிளாஸ்டிக் சோப்பு டப்பாவை 200 ரூபாய்க்கு ஒருவரது தலையில் கட்டுவதோடு, மோந்து பாருங்க சார் சரோஜா தேவி வாசனை வரும் என ஓடும் ரயிலில் சூர்யா செய்யும் சீட்டிங் சாகசங்கள் நிறைந்த பிதாமகன் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்து விட்டது.

இதனை ரியலாக மாற்றியிருக்கிறார் அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி. தான் குளித்த நீரிலிருந்து உருவாக்கப்பட்ட சோப்பினை நுகர்ந்தால் தனது வாசனை வரும் என்று புதிதாக 5000 வாசனை சோப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளார்.

இதனால் ஹாலிவுட்டில் சாதாரண நடிகையாக வந்த சிட்னி ஸ்வீனி இன்று உலகின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் எக்ஸ்பெர்ட்களில் ஒருவராக மாறியுள்ளார். தன் மீதும், தன் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்டவர்களின் கோரிக்கைகளை ஏற்று, குளிக்கும் போது தன் உடலில் பட்டு வெளியேறும் நீரினை சேகரித்து அதை பயன்படுத்தி குளிக்கும் சோப் ஒன்றினை உருவாக்கியுள்ளார் ஸ்வீனி.

இதற்காக பல மாதஙகளாக தன்னுடைய குளியல் அறையிலிருந்து வெளியேறும் நீரினை நீர் தேக்க தொட்டியில் சேகரித்து, அதனை தண்ணீர் லாரி மூலமாக சோப் தொழிற்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சோப்பு உருவாக்கப்படும்போது பயன்படுத்தும் நீருக்கு பதிலாக சிட்னி ஸ்வீனி குளித்த நீரினை பயன்படுத்தியுள்ளனர்.

Dr. Squatch என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வெறும் 141கிராம் மட்டுமே கொண்ட இந்த வாசனை சோப்பின் விலையை 8 டாலராக அதாவது இந்திய மதிப்பில் 650 ரூபாயாக நிர்ணயித்தனர்.

சிட்னி ஸ்வீனி இந்த சோப்பினை மார்க்கெட்டில் வெளியிட்ட முதல் சில நொடிகளில் இந்த சோப்பினை விற்பனை செய்த இணையதளம் முடஙகிப் போனது. அதனை சரி செய்த ஒரு சில நொடிகளில் முதல் கட்டமாக மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட 5ஆயிரம் சோப்புகளும் விற்றுத் தீர்ந்தன.

அதிகாரப்பூர்வமான இந்த விற்பனை முடிவுக்கு வந்தாலும், அதனை வாங்கிய 5ஆயிரம் பேரும் அந்த சோப்புகளை இ-பே(E-Bay) மூலமாக ரீ-சேல் செய்யத் தொடங்கியதாக கூறப்படுகின்றது. தொடக்கத்தில் ஓரிரு சோப்புகள் மட்டுமே மறு விற்பனைக்கு வந்ததால், அந்த சோப்பினை இந்திய மதிப்பில் 80ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக விலை கொடுத்து சிலர் வாங்கினர். இதனைக் கண்ட மற்றவர்களும் தங்களிடம் உள்ள நடிகையின் வாசனை சோப்பை விற்பனைக்கு பதிவிட்டதால், தற்போது இந்த சோப்பின் விலை 20 முதல் 25ஆயிரம் ரூபாய் வரையில் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது.

சிட்னி ஸ்வீனியின் இந்த சோப் வியாபாரம் வெற்றி பெற்றதற்கு காரணமே, ஸ்வீனியின் உடலில் இருந்து வரும் வாசம் எப்படி இருக்கும் என்பதை உணர வேண்டும் என்ற ரசிகர்களின் அதிதீவிர ஆசை தான் என்று கூறப்படுகின்றது. அந்த சோப்பில் குளித்து வாசனையை உணராமல் இப்படி ஆன்லைனில் அதிக விலைக்கு விற்கிறார்களே ? என சோப்பு கிடைக்காத சிட்னி ஸ்வீனியின் சில வெறியர்கள் Reddit உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு புலம்பி வருகின்றனர்.

அதேசமயம், சிட்னி ஸ்வீனியை நேரில் பார்த்து அவரிடம் இருந்து வரும் வாசனை எப்படி இருக்கும் என்பதை அறியாமல், இந்த சோப்பிலிருந்து வருவது அவர் வாசம் தான் என எப்படி உறுதி செய்வீர்கள் ? என ஸ்வீனியின் Gen-z ரசிகர்களை சிலர் விமர்சித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies