RECENT NEWS

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

Jun 12, 2025

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

Jun 12, 2025

முகப்பு

காபி சாப்பிடலாமா?.. மனைவியின் மாஸ்டர் பிளான்.. கணவன் தப்பியது எப்படி?

Jun 10, 2025 12:13 PM

278

காபி சாப்பிடலாமா?.. மனைவியின் மாஸ்டர் பிளான்.. கணவன் தப்பியது எப்படி?

கணவன் தப்பியது எப்படி?

தனது காதலனுடன் வாழ ஆசைப்பட்டு, கணவர் மற்றும் பெற்ற குழந்தைகளை கொல்ல நினைத்த பெண், தற்போது சிறை கம்பிகளுடன் குடித்தனம் நடத்தி வருகிறார். என்ன நடந்தது? பெண் சிக்கியது எப்படி? பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கேரளூர் கிராமத்தில் வசிப்பவர் கஜேந்திரா. இவருக்கு 33 வயதில் சைத்ரா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகள், மனைவி என நிம்மதியாக கஜேந்திராவின் குடும்ப வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்த நிலையில், இதே ஊரைச் சேர்ந்த புனித் என்பவருடன் சைத்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது திருமணத்தை தாண்டிய பழக்கமாக மாறியுள்ளது.

இதனால் கணவர் இல்லாத நேரங்களில், காதலனுடன் அடிக்கடி தனிமையில் நேரத்தை செலவழித்து வந்த சைத்ரா, குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இது கணவர் கஜேந்திராவுக்கு தெரியவர, தனது மனைவியை கடுமையாக கண்டித்து, தகாத உறவைக் கைவிடும்படி எச்சரித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடமும் தெரிவித்திருக்கிறார். இதனால் மருமகளுக்கு புத்திமதி கூறிய அவர்கள், ஒழுங்காக இருக்கும்படி எச்சரித்தனர்.

அதைத்தொடர்ந்து சில நாட்கள் அமைதியாக இருந்த சைத்ராவுக்கு மீண்டும் காதல் அலை அடித்திருக்கிறது. அதே கிராமத்தில் வசிக்கும் சிவராஜ் கவுடா என்பவருடன் சைத்ராவுக்கு நெருங்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புனித் என்பவருடனான பழக்கம் குடும்பத்தினருக்குத் தெரிந்து பிரச்சினை ஏற்பட்டதால், இம்முறை சிவராஜுடனான பழக்கம் கணவருக்கு தெரிந்ததால், அவ்வளவுதான் என சைத்ராவுக்கு லேசான அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த உறவை கைவிட மறுத்த சைத்ரா, மாறாக உறவுக்கு தடையாக இருக்கும் தனது கணவர், இரு குழந்தைகள், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரை கொலை செய்யத் திட்டமிட்டார்.

இந்த திட்டத்தில் அவரது காதலன் சிவராஜும் கைகோர்க்க, அவர் கொடுத்த விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளை காபியில் கலந்து, கணவர் மற்றும் குழந்தைகளை குடிக்கச் சொல்லி அன்பாக கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் காலி செய்துவிட்டு, காதலனுடன் இன்பமாக வாழலாம் என நினைத்துக்கொண்டிருந்த சைத்ராவின் கொடூர எண்ணம் நிறைவேறவில்லை. காபியை குடித்த இளைய மகனுக்கு உடனே வாந்தி மயக்கம் ஏற்பட, அவனை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடைசியாக மனைவி கொடுத்த டீயை குடித்தே மகனுக்கு இப்படி ஆனது, என சந்தேகமடைந்த கஜேந்திரா வீடு முழுக்க தேடி பார்த்தபோது, வித்தியாசமான மாத்திரை அட்டைகளை கைப்பற்றி உள்ளார்.

பின்னர் அவற்றை எடுத்து சென்று மெடிக்கல் ஷாப்பில் விசாரித்தபோது, அவை விஷத்தன்மை கொண்டது என தெரியவந்ததால் கஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார். இதை இப்படியே விட்டால், வீட்டில் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என அலர்ட்டான கஜேந்திரா, தனது மனைவி சைத்ரா மீது பேலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் காபியில் கலக்கப்பட்ட விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து சைத்ராவை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தினர். தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் குடும்பத்தினரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டு, அதற்காக விஷ தன்மை கொண்ட மாத்திரைகளை காபியில் கலந்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் சைத்ராவையும், அவரது காதலன் சிவராஜ் கவுடாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம் தாண்டிய உறவுக்கு தடையாக இருந்த கணவன் அவரது குடும்பத்தை தீர்த்துக்கட்டத் பெண் செய்த இந்த துணிகர சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies