முகப்பு
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு
Jun 13, 2025 07:38 AM
82
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு
குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகலில் டேக் ஆஃபான சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரியின் ஹாஸ்டலில் விழுந்து சிதறியது.
இதில் விமானத்தில் இருந்த ஒருவரை தவிர மற்ற 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், விமானம் நேரடியாக விழுந்த இடத்தில் பிரதமர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விபத்து நிகழ்ந்தது குறித்தும், சேத விவரங்கள் பற்றியும் அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
முன்னதாக, விமான விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைப்பெற்று வரும் சிவில் மருத்துவமனைக்கு பிரதமர் சென்றார்.
அங்கு சிகிச்சை பெறுவோரை சந்தித்து நலம் விசாரித்த அவர், அவர்களின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் உயிர்தப்பிய ஒரே பயணியான விஸ்வாஷ் குமாரையும் பிரதமர் அங்கு சந்தித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu