3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் - ஈரான் மோதல்
Jun 15, 2025
முகப்பு
எரிமலை போன்ற நெருப்பு 1000 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. SDRF Team PPE அணிந்தும் காக்க முடியாதது ஏன்?
Jun 14, 2025 06:53 AM
137
1000 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. PPE அணிந்தும் காக்க முடியாதது ஏன்?
ஏர்இந்தியா விமான விபத்தில் மேலே ஏறிய 625 அடியில கீழே விழுந்ததுதான்... அடி பட்டேனும் பலர் உயிர்தப்பியிருக்கக் கூடும்.. ஆனால்... அது முடியாதது ஏன்? SDRF, தீயணைப்புத்துறை பிபிஇ என்ற பர்சனல் புரொடக்சன் உடையணிந்தும் காப்பாற்ற முடியாதது ஏன்? இந்த செய்தியில் பார்க்கலாம்...
அதன் விளைவு... மேகங்களை விரட்டிவிட்டு விண்ணை நிரப்பியது தீப்பிளம்பு... குபீரெனப் பற்றிய தீயை அணைக்க எவ்வளவு தீயணைப்பு வாகனங்கள் வந்தும் முடியாமல் போனது..
260 பேரை எரித்தது... ஒரு சில லிட்டர் பெட்ரோல் அல்ல.. ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருள்.. சமையற்கூடம் அருகே விழுந்து வெடித்துச் சிதறியிருக்கிறது...
இது, கிட்டத்தட்ட ஒரு எரிமலை வெடித்தல் வெளியேறும் வெப்பத்தின் அளவுக்குச் சமம் என அங்கு SDRF குழுவில் தீயணைப்பு, மீட்புப் பணியில் இருந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்..
ஒரு எரிமலை வெடித்தால் அதில் இருந்து 1140 முதல் 1170 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் ஏற்படும்..
ஆனால், அந்த ஒன்னேகால் லட்சம் லிட்டர் பெட்ரோல் ஒரே நேரத்தில் சிதறி வெடித்ததில் கிட்டத்தட்ட 1000 டிகிரி செல்சியஸ்-க்கு வெப்பம் நிலவியதாம்..
வெப்பத்தில் இருந்து அவர்கள் அணிந்து வந்த பர்சனல் புரொடக்சன் என்ற PPE, ஆடை காப்பாற்றாது என்பதால், கண்முன் கருகியவர்களை காப்பாற்றி கடமையாற்ற முடியாமல் தவித்து நின்றதாக வேதனை தெரிவித்தனர்..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu