முகப்பு
''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்
Jun 16, 2025 07:54 AM
24
''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்
அ.தி.மு.க. ஆட்சியில் அமைதி, வளர்ச்சிப் பாதையில் சென்ற தமிழ்நாட்டை, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ராணிப்பேட்டை சோளிங்கரில் பா.ம.க. இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, பைக்கில் இருந்து தவறி விழுந்து பலியானதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்தார்.
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ முதலமைச்சருக்கு துளியும் இல்லை என்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இ.பி.எஸ். விமர்சித்துள்ளார்.
சக்கரவர்த்தி கொலை வழக்கில் கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என்றும் இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu