முகப்பு
விமானத்தையே திணறடிக்கும் பறவைகள் விமானம் மீது பறவை மோதினால் என்ன நடக்கும்?.. TECHNOLOGY-ஐ மிரட்டும் பின்னணி
Jun 16, 2025 01:57 PM
25
விமானத்தின் மீது பறவை மோதினால் என்ன நடக்கும்? சின்ன சிறு பறவைகளால் கூட விமானத்திற்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு என்ஜின்களும் செயலிழந்து போனதற்கு பறவைகளும் காரணமாக இருக்கலாம் என விமான போக்குவரத்து இயக்குநகரமான DGCA தெரிவித்துள்ளது. அப்படி விமனத்தின் மீது பறவைகள் மோதுனால் என்ன நடக்கும்? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
பொதுவாக விமானத்தின் மீது பறவைகள் மோதும்போது சின்னச்சிறு சேதங்களும், அதனால் சிறிய பாதிப்புகளும் ஏற்படலாம். ஆனால் சில நேரங்களில் அதுவே பெரிய அளவிளான சேதாரங்களுக்கு வழிவகுத்துவிடுகிறது. விமானத்தில் இருக்க கூடிய windshield என்கிற முன்பக்க கண்ணடிகளில் பறவைகளின் அலகுகள் மோதும்போது அதனால் விரிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதனால் விமானத்தின் உட்பக்கதில் இருக்க கூடிய, காற்றின் அழுத்தத்தில் மாறுபாடுகள் ஏற்படலாம். இதன் காரணமாக விமானம் பறக்க கூடிய உயரத்தை தக்க வைக்கும் திறனை இழந்து, படிப்படியாக விமானம் கீழ் நோக்கி வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு பிரமாண்ட விமானம் மீது ஒரு சின்னச் சிறிய பறவை மோதுவதால் ஏன் இவ்வளவு பெரிய சேதம் ஏற்படுகிறது என சந்தேகம் ஏற்படலாம். 5 கிலோ எடை கொண்ட பறவை ஒன்று அதிவேகமாக மோதும்போது, அது ஒரு பாறை மோதுவதற்கு சமம் என கூறப்படுகிறது. அதனால் தான், ஆகாயத்தில் பறக்கும் விமானமானது, இவ்வளவு பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது என கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி, ஒருவேளை இந்த பறவைகள், விமான என்ஜினின் விசிறிக்குள் சிக்கிக்கொண்டால், அப்போது என்ஜின் செயலிழக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அகமதாபாத்தில் நடந்த இந்த விமான விபத்திற்கும் பறவைகள் மோதல் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் கருப்புப்பெட்டியில் உள்ள தரவுகளை ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான முழு விவரமும் வெளிச்சத்திற்கு வரும் என சொல்லப்ப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu