முகப்பு
RAT தான் விபத்துக்குக் காரணமா?.. கோணம் மாற.. காட்சியும் மாறுது..
Jun 16, 2025 02:02 PM
82
ஏற்கெனவே கேப்டன் ஸ்டீவ் ஏர் இந்தியா விமான விபத்துக்குக் காரணம் கோ-பைலட்டின் சிறு தவறாக இருக்கலாம் என அவர் ரன்வே சிசிடிவியைப் பார்த்து கணித்திருந்த செய்தியைப் பார்த்தோம். ஆனால், தற்போது, முற்றிலும் வேறு ஒரு வீடியோவில் வேறு காரணத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுகுறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்..
கேப்டன் ஸ்டீவ்... இவர், விமான விபத்துக்களுக்கான காரணங்களை ஆய்வு செய்யும் நிபுணர் ஆவார்..
முந்தைய வீடியோவில் கோ பைலட் லேண்டிங் கியரை உள் இழுப்பதற்கு பதிலாக முன்கூட்டியே ஃப்ளேப்ஸை இயக்கிவிட்டதாலேயே விபத்து நடந்திருக்கலாம் என தியரிகளின் அடிப்படையில் கணித்தார்.
தற்போது, கோணமும், காட்சியும் மாற.. அனைத்தும் மாறியிருக்கிறது.. வேறொரு வீடியோவில் RAT காரணமாக இருக்கலாம் என உறுதிப்படுத்தும் விதமாக 4 ஆதாரங்களை ஸ்டீவ் பட்டியலிட்டிருக்கிறார்.
அதில், ஒருவர் மாடியில் இருந்து எடுத்த வீடியோவில், விமானம் பறக்கும் போது, RAT என்ற விசிறி போன்ற அமைப்பு வெளிப்பட்டு செயல்படுத்தப்பட்டதை அறிந்திருக்கிறார் ஸ்டீவ்.
முதலாவது எவிடன்ஸ்... RAT என்ற ரேம் ஏர் டர்பைன்... விமானத்தின் அடியில் வலதுபுறம் ஒரு கதவால் மூடப்பட்டு, அவசர காலங்களில் திறக்கப்படுவதுதான் இந்த RAT. Evan rude மோட்டார் கொண்ட இதில் 2 பிளேடுகள் இருக்கும்.
அதன் வேலையே மிகத் தீவிரமான எமர்ஜென்சி காலங்களில் எலக்ட்ரிக்கல், ஹைட்ராலிக் பிரஸ்ஸரை வழங்கி, விமானத்தை இயங்க வைக்கச் செய்வதுதான்.
3 முக்கியமான நேரங்களில் இந்த RAT ஆனது வெளிப்படும்.
1. பெரியளவிலான எலக்ட்ரிக்கல் ஃபெயிலியர்
2. பெரியளவிலான ஹைட்ராலிக் ஃபெயிலியர்
3. இரண்டு எஞ்சினும் செயலிழந்து போவது
இரண்டாவது எவிடன்ஸ்..
உரத்த ‘ஸ்ஸ்ஸ்ஸ்...’ சத்தம் அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பதை கேப்டன் ஸ்டீவ் சுட்டிக்காட்டினார்.
ஆல்டர்னேட்டாக ஆக்சிலரி பவர் யூனிட் இருந்தாலும், அதற்கு விமானம் இயங்குமளவு சக்தி கிடைத்திருக்காது எனவும் என்றார் கேப்டன் ஸ்டீவ்.
இருப்பினும் அதனைக் கொண்டு ரேடியோவில் பேசலாம். முன்னிருக்கும் இன்ஸ்ட்ருமென்ட்களை ஓரளவு இயக்கலாம் என்றார்.. எனவேதான் RAT ஹைட்ராலிக்கிற்கு தேவைப்படும் சக்தியைக் கொஞ்சம் கொடுத்திருக்கலாம் எனக்குறிப்பிட்டார் ஸ்டீவ்.
ஆனால், அது 30,000 அடியில் இயங்கும்போதுதான் சாத்தியமே தவிர, இந்த விமானம் இயங்கிய 400-500 அடியில் சாத்தியமில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
ஜப்பான் ஏர் 787 தரையிறங்கும்போதுகூட RAT பயன்படுத்தப்பட்டதையும், அந்த சத்தத்தோடு, ஏர் இந்தியா விமானம் விழப்போகும் முன் விடுத்த சத்தத்தையும் ஒப்பிட்டு விளக்கமளித்தார் கேப்டன் ஸ்டீவ்..
மூன்றாவது எவிடன்ஸ்.. ஐவிட்னஸ் ரிப்போர்ட்..
இந்த விமான விபத்தில் தப்பிய ஒரே பயணியான விஸ்வாஸ் குமார் ரமேஷின் வாக்குமூலம்..
அதில், விமானம் விழுந்து நொறுங்கும் முன், ஒரு பலத்த சத்தமும், மின் விளக்குகள் விட்டு விட்டு எரிந்ததையும் கண்டதாகக் விஸ்வாஸ் கூறியிருக்கிறார்.
எனவே, RAT வெளிப்படும் போது, அதில் உள்ள எலக்ட்ரிக்கல், ஹைட்ராலிக் ஆகியவை செயல்பாட்டுக்கு வருகையில், விமானத்துக்குள் விளக்குகள் ஃப்ளிக்கராகி அதாவது விட்டு விட்டு எரியும் எனச் சுட்டிக்காட்டினார் கேப்டன் ஸ்டீவ்.
நான்காவது எவிடன்ஸ்... மே டே கால் கொடுத்த விமானி, நோ த்ரஸ்ட்.. நோ பவர் எனக் கூறியது..
எனவே, RAT வெளிப்பட்ட வீடியோ, விமானத்தின் சத்தம் கேட்கும் ஆடியோ, விமானத்துக்குள் இருந்து நேரில் பார்த்தவர் அளித்த சாட்சியம், மே டே கால் கொடுத்த விமானியின் தகவல் ஆகிய 4 டாட்ஸ்களை கனெக்ட் செய்யும் போது இது 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் ஃபெயிலியர் ஆனதைக் குறிக்கிறது என்றார்.
இந்த வீடியோவைப் பார்த்ததும் கோ பைலட் மீதான தவறில் இருந்து டுயல் எஞ்சின் ஃபெயிலியருக்கு நான் கட்சி மாறிவிட்டேன் எனவும் கேப்டன் ஸ்டீவ் கூறியிருக்கிறார்.
கடந்த வீடியோவில் ஒரு கோணத்தில் பார்த்து தான் அனலைஸ் செய்த கருத்தை மாற்றி, திருத்தி, மற்றொரு கோணத்தில் வேறு ஒரு வீடியோவில் புதிய ஆதாரத்தைக் கண்டு அதையும் அனலைஸ் செய்து அறிவித்திருக்கிறார் கேப்டன் ஸ்டீவ்.
தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஒருபோதும் திருத்திக் கொள்ளத் தயங்கக்கூடாது என்றும் கற்பித்திருக்கிறார் கேப்டன் ஸ்டீவ்..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu