BIG STORIES
தனுஷுடன் பிரச்சனை மௌனம் கலைத்தார் இயக்குநர் வெற்றிமாறன்.. ரூ 20 கோடி மேட்டர் ஓவர்
Jul 01, 2025 01:06 AM
24
தனுஷுடன் பிரச்சனை மௌனம் கலைத்தார் இயக்குநர் வெற்றிமாறன்.. ரூ 20 கோடி மேட்டர் ஓவர்
சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை சார்ந்த கதைக்கு தடையில்லாசான்று தருவதற்கு தனுஷ் 20 கோடி ரூபாய் கேட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாகி உள்ளதாகவும் வெளியான தகவலை இயக்குனர் வெற்றிமாறன் மறுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்
தனுஷ் திரையுலக வாழ்க்கையில் செல்வராகவனுக்கு பின்னர் பொல்லாதவன், வட சென்னை, அசுரன் என பிரமாண்ட வெற்றிபடங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்..!
வட சென்னை 2 படம் எப்போது என்று வெற்றிமாறனிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்க, தனுஷ் இட்லிகடை படம் எடுக்க போய்விட்டதால், வெற்றிமாறன் அதே வட சென்னை குழுவுடன் சிம்புவை நாயகனாக வைத்து எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார்
இதனால் வட சென்னை 2 வை, சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்குவதாக தகவல் வெளியானது. வெற்றிமாறன், சிம்புவை வைத்து புதிதாக படம் ஒன்றை இயக்க போவதாக தனுஷிடம் கூறியதாகவும், முதலில் வாழ்த்து சொன்ன தனுஷ், சில மணி நேரம் கழித்து தனது மேனேஜர் மூலம் வெற்றிமாறனை செல்போனில் அழைத்து 20 கோடி ரூபாய் ராயல்டி கேட்டதாகவும் தகவல் வெளியானது.
ஏற்கனவே நயந்தாரா விடம் தனுஷ் ராயல்டி கேட்ட பஞ்யாத்து நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், தனக்கு திரை உலகில் திருப்புமுனை தந்த இயக்குனர் வெற்றி மாறனிடம் 20 கோடி இழப்பீடு கேட்பதா ? என்றும் நன்றிமறந்தவர் என்றும் தனுஷ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக மவுனம் காத்து வந்த இயக்குனர் வெற்றிமாறன், நான் இப்ப தான் யூடியூப் வீடியோக்களை பார்த்தேன் என்று விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்
அதில் தான் சிம்புவை வைத்து வட சென்னை கதையம்சம் சார்ந்த படத்தை செய்ய போவதாக தனுஷிடம் சொன்னதும் , வட சென்னை தொடர்பாக ராயல்டி கேட்க உரிமை இருந்தும் தனுஷ் ஒரு பைசா கூட தன்னிடம் கேட்க வில்லை என்றும் இது தொடர்பாக யூடியூப்பில் வெளியாகி உள்ள தகவல்கள் தவறானவை என்றும் விளக்கம் அளித்தார்
மேலும் தான் சிம்புவை வைத்து இயக்க இருக்கும் படம் வட சென்னை 2 அல்ல என்று தெரிவித்த வெற்றிமாறன் , சிம்பு மூலம் நீங்கள் புதிய அனுபவத்தை பெறுவீர்கள் என்று தனுஷ் தன்னிடம் தெரிவித்ததாகவும் வெற்றிமாறன் தெரிவித்தார்
வெற்றி மாறனின் இந்த கேள்வி பதில் வீடியோவால், ஒருவழியாக வட சென்னை 2 படத்திற்காக 20 கோடி ரூபாய் தனுஷ் இழப்பீடு கேட்டு அடம்பிடிப்பதாக வெளியான ராயல்டி பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu