BIG STORIES
ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!
Jul 01, 2025 07:48 AM
121
ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!
RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்றி வருகிறார், 28 வயது கோபிகா! இவர், பணியில் இருந்தபோது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ இருப்பதாக இவரது கவனத்திற்கு வந்துள்ளது.
அந்த வீடியோவில், ரயிலில் பயணிகள் பயணம் செய்யும் காட்சியும், அதனிடையே சுமார் 35 வயதுடைய வக்கிர ஆண் நபர், ரயிலில் கதவருகே அமர்ந்து கொண்டு எதிரே நின்ற பெண்மணிக்கு தெரியுமாறு, ஆபாசமாகவும் அருவருக்கத்தக்கவாறும் நடந்து கொண்டது பதிவாகியிருந்தது.
அந்த வக்கிர வீடியோவானது, 28.06.25 அன்று மாலை பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. உடனே, RPF உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, 09.30 மணிக்கு திருவான்மியூர் இருப்புப்பாதை காவல் நிலையம், வந்து புகார் தெரிவித்தார். இந்தப் புகாரினைப் பெற்று போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக ரயில் நிலையப் பகுதிகளில் அந்த வக்கிரனை தேடிவந்த நிலையில், இந்திரா நகர் ரயில் நிலையத்தில் அதேபோன்று உருவ ஒற்றுமையுடன் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகேயுள்ள தங்கச்சி அம்மா பட்டி, துர்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த தண்டபாணியின் மகன், அழகர் ராஜா என்பது தெரியவந்தது. மேலும் விசாரித்தபோது, மின்சார ரயிலில் பெண் முன்னால், தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படியொரு செயலை செய்துவிட்டு, எதுவுமே தெரியாததுபோல் சுற்றிக்கொண்டிருந்த அழகர் ராஜாவை சசிகலா, பரந்தாமன், மஹாலெட்சுமி,
கார்த்திக், இராமாத்தாள் உள்ளிட்ட ரயில்வே போலீஸார் கொத்தாக தூக்கிவந்து வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 13 நாட்கள் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu