RECENT NEWS

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

Aug 06, 2025

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

Aug 06, 2025

BIG STORIES

அதெப்படி திமிங்கலம் ...லோனே வாங்காத லாரியை ஈக்வெட்டாஸ் தூக்குனாங்க..? இப்படியும் மோசடி உஷார் மக்களே

Aug 05, 2025 02:08 AM

200

அதெப்படி திமிங்கலம் ...லோனே வாங்காத லாரியை ஈக்வெட்டாஸ் தூக்குனாங்க..? இப்படியும் மோசடி உஷார் மக்களே

அதெப்படி திமிங்கலம் ...லோனே வாங்காத லாரியை ஈக்வெட்டாஸ் தூக்குனாங்க..? இப்படியும் மோசடி உஷார் மக்களே

சென்னை வேப்பம்பட்டை சேர்ந்தவரின் பெயரில் உள்ள ஆயில் டேங்கர் லாரிக்கு , தங்களிடம் கடன் பெற்றதாக கூறி நாமக்கல்லில் வைத்து ஈக்வெட்டாஸ் நிறுவன கலெக்சன் ஊழியர்கள் பறித்துச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

கடனே வாங்காமல் தான் பணம் கொடுத்து வாங்கிய டேங்கர் லாரியை , இக்வெட்டாஸ் நிறுவன ஊழியர்கள் பறித்துச்சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்த லாரி உரிமையாளர் பொன்னுரங்கம்..!

லாரியின் ஆர்சி புத்தகத்தில் எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட் நிறுவனத்திடம் இருந்து பொன்னுரங்கம் வாங்கியதாக விஜயவாடா வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்க யாரோ ஒருவர் வாங்கிய கடனுக்காக பொன்னுரங்கத்தின் லாரியை எப்படி பறிக்கலாம் என்று நாமக்கல்லில் உள்ள ஈவ்வட்டாஸ் அலுவலக வாசலில் அமர்ந்து லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தனக்கு சொந்தமான டேங்கர் லாரியில் ஈரோட்டில் இருந்து ஆயில் ஏற்றிக் கொண்டு வந்த போது நாமக்கல் அருகே லாரியை மறித்த இருவர் , தங்களை ஈக்வட்டாஸ் நிறுவன ஊழியர்கள் எனக்கூறியதோடு, அந்த லாரியின் பெயரில் பத்மநாபன் என்பவர் கடன் வாங்கி இருப்பதாக கூறி தனது லாரியை பறித்துச்சென்று அரசு யார்டில் போட்டு விட்டதாக கண்ணீர் மலக் வேதனை தெரிவித்தார்

போராட்டம் நடத்தியவர்களையும் பொன்னுரங்கத்தையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் ஏற்கனவே ஈக்வெட்டாஸ் ஊழியர்கள் மீது புகார் அளித்திருப்பதாக பொன்னுரங்கம் தெரிவித்தார். ஈவ்வெட்டாஸ் தரப்பில் விசாரித்த போது பொன்னுரங்கம் வைத்திருக்கும் லாரியின் ஆவணத்தை தங்களிடம் காண்பித்து நாமக்கல்லை சேர்ந்த பத்மநாபன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ந்தேதி 8 லட்சத்து 87 ஆயிரத்து 068 ரூபாய் வாங்கியதாகவும், 48 மாத தவணை செலுத்த வேண்டும் என்ற நிபந்தணையுடன் வழங்கப்பட்ட கடனில் 555 நாட்கள் தவணை பாக்கி இருக்கும் நிலையில் 8 மாதங்களுக்கு மேலாக பத்ம நாபனிடம் இருந்து தவணை தொகை வராததால் AP16TD1244 என்ற ஓப்பன் பாடி லாரியை தேடி வந்ததாகவும் , அந்தலாரியின் பாடியை டேங்கர் லாரி போல மாற்றி பயன்படுத்தி வந்ததை கண்டுபிடித்த தங்களது சீசிங் டீம் தங்களுக்கு வர வேண்டிய 11லட்சத்து 96 ஆயிரத்து 843 ரூபாய் பாக்கிக்காக லாரியை பறிமுதல் செய்ததாக ஈவ்வெட்டாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லாரியின் உரிமையாளரான பொன்னுரங்கமோ ஆர்சி புத்தகத்தில் முதல் ஓனர் என்று எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட் என்றும் 2 வது ஓனர் பொன்னுரங்கம் என்றும் இருப்பதை சுட்டிக்காட்டியதோடு, தனது பெயரில் உள்ள லாரிக்கு இவர்கள் எப்படி பத்மநாபனுக்கு பணம் கொடுத்தனர் என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் பழைய லாரிகளை வாங்கி விற்கும் புரோக்கர்களின் தந்திரம் மற்றும் ஈக்வட்டாஸ் வங்கி கடன் வழங்கும் ஊழியர்களின் மெத்தனத்தால் பொன்னுரங்கம் லாரியை பறிகொடுத்து கண்ணீரில் தவிப்பது தெரியவந்தது.

அதாவது எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து இரண்டு பழைய ஓப்பன் பாடி லாரிகளை நாமக்கல் பத்மநாபனும் அவரது நண்பரான நாவலடி என்பவரும் 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளனர். அந்த இரு லாரிகளுக்காண பைனான்ஸ் தொகைக்காக இரு தனியார் வங்கிகளை அனுகி உள்ளனர். ஒன்று டாடா பைனான்ஸ் மற்றொருன்று ஈக்வெட்டாஸ் . இந்த இரு நிறுவன ஊழியர்களும் லாரிகளை நேரில் பார்க்காமல் டாக்குமெண்டை மட்டும் பார்த்து வாகன கடன் கொடுக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அதன் படி டாடா பைனான்ஸ் பத்மநாபனிடமே நேரடியாகவும் , ஈக்வட்டாஸ் நிறுவனமோ ஆர்.சி புத்தகத்தில் உள்ள எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட் நிறுவனத்துக்கும் பணம் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் இரு லாரிகளையும் தனது பெயருக்கு மாற்றாமல் , அதனை கண்டய்னர் ஏற்றிச்செல்லும் வகையில் உருமாற்றிய பத்மநாபன், 2 மாதங்களுக்கு மேலாக சென்னை துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றிச்செல்ல பயன்படுத்தி உள்ளார். இதனை அறிந்து எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தினர் கண்டித்ததோடு, தங்கள் நிறுவன பெயரில் லாரிகளை இயக்க கூடாது என்றும் விபத்து நேர்ந்தால் தங்கள் நிருவனம் பாதிக்கப்பட்டும் என்றும் எச்சரித்துள்ளனர். இதனால் இரு லாரிகளையும் மாதவரம் யார்டில் நிறுத்தி வைத்து அவற்ரை விற்பனை செய்ய இருப்பதாக வாட்ஸ் அப்பில் விளம்பரம் செய்துள்ளனர்.

யாரும் வராத நிலையில் , மாத தவணையை மட்டும் சரியாக செலுத்தி வந்துள்ளார் பத்ம நாபன், ஒரு கட்டத்தில் பழைய இரும்புக்கு இரு லாரிகளையும் கொடுத்து விட திட்டமிட்ட பத்மநாபன், இரும்பு வியாபாரி ஜீவா என்பவரிடம் இரு லாரிகளையும் 7 லட்சம் ரூபாய்க்கு கைமாற்ற பேசி உள்ளார். அவரோ ஆர்.சி புத்தகம் யார் பெயரில் உள்ளதோ அவரிடம் தான் பணம் கொடுப்பேன் என்று கறாராக கூறியதோடு, எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட் வங்கி கணக்கிற்கு 5 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பணம் எதற்காக தங்களுக்கு வந்திருக்கின்றது என்று எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட் பங்குதாரர்களின் ஒருவரான தேவராஜ், விழித்துக் கொண்டிருந்த போது உங்களிடம் வாங்கிய லாரியை தாங்கள் ஜீவாவுக்கு பழைய இரும்புக்கு விற்றுவிட்டோம், அவர் தங்களிடம் தான் பணத்தை தருவேன் என்று கூறி அனுப்பி இருக்கிறார், நீங்க என்னுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்று கூறி அந்த பணத்தையும் பத்ம நாபனே பெற்றுக் கொண்டதாக கூரப்படுகின்றது.

இந்த நிலையில் பழைய இரும்புக்கடையில் இருந்த ஒரு லாரியை 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய பொன்னுரங்கம் முதல் ஓனரான எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட்டை அனுகி பெயர் மாற்றம் செய்து தர கூறியுள்ளார். அவர்களும் விஜயவாடா ஆர்டிஓ அலுவலகம் மூலமாக பொன்னுரங்கத்தின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளனர். இதனால் கடன் வாங்கிய பத்ம நாபன் பெயரில் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் பொன்னுரங்கத்தின் பெயருக்கு மாறியதாக கூறப்படுகின்றது.

5 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய லாரியை கூடுதலாக சில லட்சங்கள் செலவழித்து ஆயில் ஏற்றிச்செல்லும் தரமான டேங்கர் லாரியாக உருமாற்றிய பொன்னுரங்கம் , ஓனர் கம் டிரைவராக கடந்த 8 மாதங்களாக ஆயில் லோடு ஏற்றிச்சென்று வந்ததாக கூறப்படுகின்றது. எஸ்.ஆர்.பி.டி டிரான்ஸ் போர்ட் வங்கி கணக்கில் லாரிக்காக பணம் செலுத்தியதால் அந்த லாரியில் தங்களுக்கு முழுஉரிமை உள்ளது என்று ஈக்வட்டாஸ் நிறுவனம் தற்போது லாரியை கைப்பற்றி வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்தினால் மட்டுமே லாரியை திரும்ப ஒப்படைக்க முடியும் என்று ஈக்வட்டாஸ் கறாராக தெரிவித்துவிட்ட நிலையில் , வங்கியில் கடன் வாங்கிய லாரியை சாமார்த்தியமாக ஏமாற்றி விற்ற பத்மநாபன், நாவலடி ஆகியோர் மீதும் பொன்னுரங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழைய வாகனங்களை விற்போர் கூடுமானவரை பணத்தை கையில் பெற்றவுடன் வாகனத்தை உரிய நபருக்கு பெயர் மாற்றம் செய்து விடுங்கள் தவறினால் இது போன்ற இடியப்ப சிக்கலில் மாட்டி பரிதவிக்க விட்டு விடும் என்கின்றனர் காவல்துறையினர்.

தனது வாழ் நாள் சேமிப்பை செலவழித்து லாரியை வாங்கிய பொன்னுரங்கம் , மோசடி புரோக்கர்களாலும், லாரியை நேரில் பார்க்காமல் டாக்குமெண்டை மட்டும் பார்த்து கடன் கொடுத்த மெத்தன வங்கி ஊழியர்களாலும் லாரியை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பொன்னுரங்கத்துக்கு ஈக்வட்டாஸில் இருந்து லாரியை மீட்டுக் கொடுக்க போராட்டத்தை முன்னெடுத்த லாரி உரிமையாளர்கள் புரோக்கர்களின் இந்த நூதன் மோசடியை அறிந்து திகைத்து போயினர்.

ஒரு பொருளை அதன் உரிய மதிப்பைவிட குறைந்த விலைக்கு தருவதாக ஒருவர் சொன்னால் , அதன் பின்னால் மறைக்கப்பட்ட மோசடி வித்தையை வாங்கும் நபர் விசாரித்து அறிந்து உஷாராகி தப்பி விடுவது அவசியம். இல்லையேல் பொன்னுரங்கத்தை போல தவிக்க நேரிடும். மெத்தனத்தில் செய்தாலும், பேராசையில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies