RECENT NEWS

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

BIG STORIES

வில்லன் நடிகரிடமே வேலையை காட்டிய வில்லாதி வில்லன்கள்.. விடுகதையா இந்த வாழ்க்கை?

Aug 08, 2025 12:41 PM

67

வில்லன் நடிகரிடமே வேலையை காட்டிய வில்லாதி வில்லன்கள்.. விடுகதையா இந்த வாழ்க்கை?

வில்லன் நடிகரிடமே வேலையை காட்டிய வில்லாதி வில்லன்கள்.. விடுகதையா இந்த வாழ்க்கை?

சினிமா வில்லன் நடிகர் ஒருவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஓடும் ரெயிலில் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பழவந்தாங்கல், பிருந்தாவன் நகரிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர், சினி சரவணன் என அழைக்கப்படும் சரவணன்.

ஆலந்தூர் தொகுதி அதிமுக பிரமுகரான இவர், ஓய்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரி ஒருவர் தொடுத்த வழக்கில் ஆஜராவதற்காக கடந்த 5 ஆம் தேதி, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார்.

மின்சார ரயில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை நெருங்கிய போது, வழக்கு செலவுக்காக நகையை அடமானம் வைத்து வாங்கிய 52 ஆயிரம் ரூபாய், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, ரயில்களில் இதுபோன்று லாவகமாக திருடும் நபர்கள் யார்?
பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பணம் களவாடப்பட்ட நேரமான காலை 11.10 முதல் 11.20 வரை சந்தேகப்படும் படியான களவாணிகளின் கை வரிசையா ? என விசாரித்து வருகின்றனர்.

மேலும், பழைய பிக் பாக்கெட்டுகளின் பட்டியலை தூசி தட்டிய மாம்பலம் ரயில்வே போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சினி சரவணன் கூறும்போது, பல ஆண்டுகளுக்கு முன்னதாக இரண்டு தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்ததாகவும், ஆனால் அந்த திரைப்படமோ முழுமை அடையாமல் வெளிவராமல் போனதாக குறிப்பிட்டவர், ஓய்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரி ஒருவர் தொடுத்த வழக்கில் ஆஜராவதற்காக மின்சார ரயிலில் பயணம் செய்த போது, பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் களவு போனதாக தெரிவித்ததோடு, நகையை அடகு வைத்த ரசீதையும் பரிதாபமாக காண்பிக்கிறார்.

நடித்த திரைப்படமும் வெளியாகாத நிலையில், அந்த வில்லன் நடிகரிடமே அடகு வைத்து எடுத்து வந்த பணத்தை திருடிய அந்த வில்லாதி வில்லன்கள் யார் ? விசாரணை செய்துவருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies